விதிமுறைகள்
1. இந்த “இணையவழி” போட்டியில் – 3 வயதிற்கு மேற்பட்டோர், பொன்னியின் செல்வனை ரசித்தவர்கள், மற்றும் பொன்னியின் செல்வனை படிக்காதவர்கள் என அனைவருக்கும் பங்கேற்க வாய்ப்புள்ளது.
2. அமெரிக்காவில் வசிக்கும் தமிழ் பேசும் அனைவரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று தங்களின் திறமையை வெளிப்படுத்தலாம்.
3. தமிழைத் தவிர்த்து பிற மொழிகளில் வரும் படைப்புகளை எங்களால் மதிப்பீடு செய்ய முடியாததால். இந்தப் போட்டிக்கு வரும் பிறமொழி படைப்புகளை எங்களால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை.
4. கீழ்க்கண்ட இரு பிரிவுகளில் போட்டிகள் நடைபெறும்
- 19 வயதிற்கு மேல் (4 பரிசுகள்)
- 3 முதல் 18 வயதினருக்கு (4 பரிசுகள்)
5. உங்களின் படைப்புகள் சமூக வலைதளங்களில் பகிரப்படும்.
6.பதிவுசெய்யப்பட்ட பங்கேற்பாளர்கள் அனைவரும் தங்களுடைய படைப்புகள்/ ஒலி/ஒளிப்பதிவை சிலம்பு வலைப்பக்கத்தில் உள்ள இணைப்பின் மூலம் பதிவேற்றம் செய்ய வேண்டும்
- பதிவேற்ற காணொளிகள் குறிப்பிடப்பட்ட நிமிடத்திற்குள் இருக்க வேண்டும். குறிப்பிடப்பட்ட நிமிடத்திற்கு மிகும் காணொளிகள் ஏற்கப்படாது – MP4 மட்டுமே போட்டிக்கு ஏற்றுக்கொள்ளப்படும்.
- நீளவாட்டில் (Landscape ) எடுக்கப்பட்ட காணொளி மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
- காணொளி முழுமையான தொடர் பதிவாக இருத்தல் வேண்டும். தொகுக்கப்பட்ட அல்லது திருத்தப்பட்ட காணொளியாக இருக்கக்கூடாது.
- ஓவியங்கள், ஒலி, ஒளிப்பதிவை அவர்களது முகநூலில் பதிவேற்றி சிலம்பின் முகநூல் பக்கத்தை (#silambuPS1) தொடர்புபடுத்த வேண்டும். அதிக பாராட்டுகளை பெரும் படைப்புகளுக்கு மதிப்பெண்கள் உண்டு.
7. காணொளிப்பதிவின் போது பின்னால் இருந்து போட்டியாளர்களுக்கு உதவி செய்தால், போட்டியார்கள் போட்டித் தகுதியை இழந்ததாக அறிவிக்கப்படும்
8. போட்டியில் பங்கேற்பதை உறுதி செய்யும்போதே தங்களது படைப்புகளைச் சிலம்பு பயன்படுத்திக்கொள்ள உறுதியளிக்கவேண்டியது அவசியம்.
நடுவர்களின் முடிவே இறுதியானது.
“பொன்னியின் செல்வன்”போட்டிக்கு பதிவு செய்ய கடைசி நாள் செப்டம்பர் 15. செப்டம்பர் 18.
பரிசு விபரங்கள் அடுத்தவாரம் வியாழக்கிழமை (15 Sept) அறிவிக்கப்படும்.
19 வயதிற்கு மேற்பட்டோர்களுக்கான போட்டிகள்
1. வினாடி வினா – இணைய வழி நேரலை
அக்டோபர் 2 , 45 நிமிடங்கள் (டெட்ராய்ட் நேரம், மதியம் 3 மணிக்கு)
பொன்னியின் செல்வன் நாவலிருந்து கேட்கப்படும் கேள்விகளுக்குக் குறுகிய நேரத்தில் சரியான பதிலளித்து முதலிடத்தைப் பெறுபவருக்கு பரிசு.
“ஓர் முதல் பரிசு மட்டுமே”
2. வர்ணனையைக் காட்சிப்படுத்துவோம் – ஓவியப் போட்டி
பொன்னியின் செல்வன் நாவலிருந்து செப்டம்பர் 15 அன்று தரப்படும் அமரர் கல்கியின் வர்ணனையை ஓவியமாகக் காட்சிப் படுத்த வேண்டும். சிறந்தப் படைப்பிற்கு பரிசு .
உங்கள் படைப்புக்களை செப்டம்பர் 30 க்குள், பதிவேற்றம் செய்ய வேண்டும். போட்டியின் முடிவுகள் அக்டோபர் 9 ஆம் தேதியன்று வெளியிடப்படும் .
“ஓர் முதல் பரிசு மட்டுமே”.
3. இசையால் வசப்படுத்துவோம் போட்டி:
பொன்னியின் செல்வன் கதைக் களத்திற்காக சிலம்பு இசைக் குழு அமைத்திருக்கும் பாடலை உங்களின் காந்த மற்றும் கம்பீர குரலில் பாடி பரிசு வெல்வீராக! செப்டம்பர் 22, போட்டிக்கான பாடல் வெளியிடப்படும்.
அக்டோபர் 6க்குள் ஒலி மற்றும் ஒளிப்பதிவைப் பதிவேற்றம் செய்ய வேண்டும். போட்டியின் முடிவுகள் அக்டோபர் 16 ஆம் தேதியன்று வெளியிடப்படும் .
“ஓர் முதல் பரிசு மட்டுமே”
4. மெட்டுக்குப் பாட்டு போட்டி:
இசை இயக்குனரின் இசையமைப்பை மேலும் மகிமைப்படுத்த, கொடுக்கப்பட்ட சந்தத்திற்குப் போட்டியாளர்கள் தங்கள் செழுமையான தமிழ் சொற்களில் பாடல் இயற்ற வேண்டும். செப்டம்பர் 22, போட்டிக்கான மெட்டு தரப்படும் .
பாடல் வரிகளை pdf கோப்பாக அக்டோபர் 6 க்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும். போட்டி முடிவுகள் அக்டோபர் 23 ஆம் தேதியன்று வெளியிடப்படும் .
சிறந்த குரல் வளம் மற்றும் மொழி நடை உடையவர்களுக்குச் சிலம்பு இசைக் குழுவில் இணைந்து தமிழ் இலக்கியங்களை இசையாக வெளியிடும் பணியில் திறமையை காட்ட வாய்ப்புகள் தரப்படும்.“ஓர் முதல் பரிசு மட்டுமே”.
மாணவச் செல்வங்களுக்கான (3 – 18 வயதினருக்கானது) போட்டிகள்
1. மாறு வேடம் புனையும் போட்டி (வயது 3 முதல் 7 வரை)
ஒரு நிமிடத்திற்கு மிகாத காணொளியை சிலம்பு வலைப்பக்கத்தில் உள்ள இணைப்பின் மூலம் பதிவேற்றம் செய்ய வேண்டும். ஒளிப்பதிவில் ஒப்பனை செய்யப்பட்ட கதாப்பாத்திரத்தின் பெயரை போட்டியாளர்கள் சொல்ல வேண்டும். அக்டோபர் 6க்குள் ஒலி மற்றும் ஒளிப்பதிவை பதிவேற்றம் செய்ய வேண்டும். போட்டி முடிவுகள் அக்டோபர் 16 ஆம் தேதியன்று வெளியிடப்படும் .
பரிசு – ஓர் முதல் பரிசு
2. ஓவியப் போட்டி: (வயது 8 முதல் 12 வரை.)
கொடுக்கப்படும் தலைப்பிற்கு ஏற்ற ஓவியம் வரைந்து அதற்குத் தகுந்த வாசகம் ஒன்றைத் தமிழில் எழுத வேண்டும்.
ஓவியத்தைப் பதட்டம் இல்லாமல் நிதானமாக புகைப்படம் எடுத்து அக்டோபர் 2க்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும். போட்டி முடிவுகள் அக்டோபர் 6 ஆம் தேதியன்று வெளியிடப்படும் .
பரிசு – ஓர் முதல் பரிசு
3. தமிழ் வாசிப்போம் போட்டி (வயது 13 முதல் 15 வரை)
பொன்னியின் செல்வன் நாவலில் இருந்து 5 வரிகள் செப்டம்பர் 15 அன்று தரப்படும். மாணவச் செல்வங்கள் அந்த வரிகளைப் பிழையின்றி ஏற்ற இறக்கங்களுடன் ஒரு நிமிடத்திற்குள் வாசிக்க வேண்டும்.
அந்த 1 நிமிட காணொளியை அக்டோபர் 2க்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும். போட்டி முடிவுகள் அக்டோபர் 9 ஆம் தேதியன்று வெளியிடப்படும்.
பரிசு – ஓர் முதல் பரிசு
4. குறுஞ்சொல்லாடல் போட்டி (வயது 16 முதல் 18 வரை)
கொடுக்கப்படும் தலைப்பில் 2-3 நிமிடங்கள் பேசி காணொளியை அக்டோபர் 6க்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும். போட்டி முடிவுகள் அக்டோபர் 23 ஆம் தேதியன்று வெளியிடப்படும் .
பரிசு – ஓர் முதல் பரிசு